அண்ணாநகர் ஸ்ரீ ஐய்யப்பா அறக்கட்டளை இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.
அண்ணாநகர் ஸ்ரீ ஐய்யப்பா அறக்கட்டளை,சென்னை முன்று சகாப்தங்களாக நற்பெயர் கொண்டு மதம், கலாச்சாரம் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் கடந்து அறிவொளி தொண்டு அறக்கட்டளையாக மக்களுக்கு சேவை புரிந்து வருகின்றது .
பொது மக்கள் சேவை மற்றும் சமூக பொறுப்பு எண்ணத்தினை உணர்ந்து அண்ணாநகர் ஸ்ரீ ஐய்யப்பா அறக்கட்டளை ஒரு பொது அறக்கட்டளையாக மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது . இதன் காரணமாக அண்ணா நகர் ஸ்ரீ ஐய்யப்பா அறக்கட்டளை 18/03/2011 இல் பதிவு செய்யப்பட்டு '' ஒரு பொது அறக்கட்டளையாக'' செயல்பட்டு வருகின்றது .
அன்னதானம் தவிர எப்போதும் அறக்கட்டளை ஐய்யப்பா சேவா சமாஜத்தின் அனைத்து தொண்டு நடவடிக்கைகளுக்கும் அறக்கட்டளை அமைக்கப்பட்டதில் இருந்து, அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்படுகிறது.
தொண்டு என்றுமே முடிவுறாத வாய்ப்பு !
அண்ணாநகர் ஸ்ரீ ஐய்யப்பா அறக்கட்டளை ஆண்டுதோறும் ஏழை மாணவர்களுக்கு சீருடை , உரை மற்றும் குறிப்பேடுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது . சென்னையில் உள்ள சில குறிப்பிட்ட பள்ளிகளை தேர்ந்தெடுத்து ஆண்டு தோறும் பள்ளி குழைந்தைகளுக்கு ஆண்டு மருத்துவ பரிசோதனைகள் நடத்த அறக்கட்டளை சார்பில் முடிவு மேற்கொள்ளபட்டுளது.
அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம்கள், ரத்த தான முகாம்கள், மற்றும் பொது மக்கள் நீரிழிவு திரையிடல் முகாம்கள், பல் மற்றும் கண் சிகிச்சை முகாம்கள் அவ்வப்போது ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது. கண்புரை அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகலுக்கு புகழ்பெற்ற கண் மருத்துவமனைகள் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு முழு அறுவை சிகிச்சை செலவையும் அறக்கட்டளை மூலம் அளிக்கபடுகின்றது.
கல்வி, சுகாதாரம் மற்றும் பொது நலனை கருத்தில் கொண்டு சேவை செய்வதைவிட விட இந்த உலகில் வேறு அர்த்தமுள்ள , பொருத்தமான சிறந்த வழி வேறு எதுவும் இல்லை என்று நம்புகின்றோம்.
சுற்று பகுதிகளில் உள்ள தகுதியுடைய மாணவர்கள், ஏழை நோயாளிகளுக்கு மருத்துவ உதவி , கிராமப்புற மக்களுக்கு அவசர காலங்களில் சுகாதார முகாம்கள், பள்ளி குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்கவும் , கல்வி உதவி புரியவும் அறக்கட்டளை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
எனவே எங்கள் திட்டங்களை முழுமையாக முடிக்க, மேலும் எங்கள் தொண்டு நடவடிக்கைகள் முழுமையாக தொடர, மனிதநேயம் மற்றும் தாராள மனம் , சேவை மனப்பான்மை கொண்ட மக்களுக்கு பொது முறையீடுஆக எங்கள் அறக்கட்டளைக்கு தாராளமாக நன்கொடை வழுங்குமாறு தங்கைளை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் நன்கொடைகளை கீழ்கண்ட எமது முகவரிக்கு நேரிலோ / தபாலிலோ / வங்கி காசோலையாகவோ / வரைவு காசோலையாகவோ அனுப்பலாம் :-